நெடுந்தீவில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக காலில் காயமடைந்தவர் இன்று (30/11) சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
நெடுந்தீவு 06ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஜோர்ச் ஸரீபன் ( சூரி- வயது46) என்பவரே இவ்வாறு கயமடைந்தவராவார்.
அண்மையில் ஏற்பட்ட காற்றின்போது கடற்தொழில் படகினை கரையேற்ற முற்பட்டவேளை கடற்கொந்தளிப்பினால் கடற்பாறையுடன் அடிபட்டு காலில் காயமடைந்து நெடுந்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய தினமே காலநிலை சீராகியதும் அம்புலன்ஸ் படகு மூலம் தீவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.