பன்னங்கண்டிப்பகுதியில் டிப்பரோடு வெள்ளத்தில் சிக்கிய இருவரும் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கிளிநொச்சி பன்னங்கண்டிப்பகுதியில் வட்டக்கச்சிக்கு செல்லும் பிரதான வீதியில் டிப்பர் வாகனத்தில் சென்று வெள்ளத்தில் மாட்டிக்கொண்ட இரண்டு நபர்களும் இன்று காலை மீட்கப்பட்டனர்.

7 மணி நேரத்திற்கு மேலான  இரவுநேர மீட்பு பணி வெற்றியளிக்காத நிலமையில் இன்று (30/11) காலையில் மீளவும் மீட்கும் பணியில் அனர்த்த முகாமைத்துவ பிரிவும் இராணுவத்தினரும்

கடமையாற்றி வந்த நிலையில் மீட்பு நடவடிக்கை வெற்றியளித்தது.

நேற்றிரவு முழுவதும் மழையின் தாக்கத்திற்கு முகம்கொடுத்து தவித்து வந்த இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு தேவையான அவசர முதலுதவிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Share this Article