நெடுந்தீவு பகுதியில் சுமார் 70 பேர் இடைத்தங்கல் முகாமில்!!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச அனர்த்த நிலவரம் தொடர்பாக நிலவர அறிக்கை சற்றுமுன் கிடைத்துள்ளது

10 குடும்பங்களை சேர்ந்த 33 பேர் நெடுந்தீவு மாவிலித்துறை பாடசாலயிலும் 12 குடும்பங்களை சேர்ந்த 29 பேர் றோ.க. மகளிர் கல்லூரியிலும் நேற்று (28/11)  மதியம் முதல் தங்கவைக்கப்பட்டுள்ளனர் .

இவர்கள் அனைவரும் வெள்ள அனர்த்தத்தினால் வீடுகளில் வசிக்க முடியாதவர்கள் என்பதுடன் இவர்களுக்கு சமைத்த உணவு நெடுந்தீவு பிரதேச செயலக ஏற்பாட்டில் வழங்கப்பட்டு வருகின்றது.

இவ் இடர்காலப்பகுதியில் மக்கள் தேவையற்ற நடமாட்டங்களை தவிர்த்து அவதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ‎

Share this Article