மண்டைதீவில் அமையப்பெறவிருக்கும் சர்வதேச துடுப்பாட்ட மைதானத்திற்கான அனைத்து உரிய திணைக்களங்களினுடனான இணைந்த கள ஆய்வானது கடந்த கடந்த ஒக். 28 அன்று மண்டைதீவு துடுப்பாட்ட மைதானம் அமயவுள்ள இடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் – கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்களம், மேலதிக அரசாங்க அதிபர் காணி – மாவட்ட செயலகம் யாழ்ப்பாணம், பணிப்பாளர் விளையாட்டு திணைக்களம் – வட மாகாணம், பிரதேச செயலாளர் – தீவகம் தெற்கு வேலணை, தவிசாளர் – பிரதேச சபை வேலணை, இணைப்பாளர் – இலங்கை துடுப்பாட்ட சபை, கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர்கள், உதவிப்பணிப்பாளர் – கடற்றொழில் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர், நீர்வள சபை உத்தியோகத்தர்கள், கடற்படை உத்தியோகத்தர்கள்,

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள உத்தியோகத்தர்கள், பிராந்திய உத்தியோகத்தர் வனவளத்திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்ப்பாசன திணைக்கள தொழில் நுட்ப உத்தியோகத்தர், நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தினர் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது