கியூமெடிக்கா நிறுவன அனுசரணையில் வேலணை மத்திய கல்லூரியில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான காலணி வழங்கும் நிகழ்வு கல்லூரி அதிபர் தலைமையில் கடந்த வியாழன் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு, பாடசாலை நிர்வாகத்தினரால் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து, அரசாங்க அதிபர் அவர்களினால் – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தொனிப்பொருளில் முழு நாட்டையும் ஒண்றிணைத்த வகையிலான போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் தொடர்பாக மாணவர்களுக்கு விரிவான விளக்கத்தை வழங்கியிருந்தார்.
இந் நிகழ்வில் வேலணை மத்திய கல்லூரி உப அதிபர், ஆசியர்கள், கியூமெடிக்கா மாவட்ட இணைப்பாளர், வேலணை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும்
மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.