யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் குமாரவடிவேல்அவர்கள் ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்கா அவர்களால்நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தொடர்பான எழுத்துமூல நியமனக் கடிதம் 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 27 ஆம்திகதியிட்டுப் ஜனாதிபதியின் செயலாளர் என். எஸ். குமனாயக்கா அவர்களால்அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் குமாரவடிவேல் அவர்கள் கல்வியியல் துறையில் சிறப்பாகப் பணிபுரிந்துவருபவர் மட்டுமல்லாது, தமிழ் சமூகத்தின் கல்வி மற்றும் பண்பாட்டுவளர்ச்சிக்காக அர்ப்பணித்து செயல்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாண உயர்கல்வியின் புதிய பாதையை வகுக்கும் இந்நியமனம், கல்விமற்றும் சமூக முன்னேற்றத்துக்கான ஓர் அரிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.