2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி, அகில இலங்கை அளவில் தமிழ் மொழி மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தமாணவர் ஒருவர் 194 மதிப்பெண்களைப் பெற்று முதலிடம் பிடித்துள்ளதுடன்சிங்கள மொழி மூலம் காலி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் 198 மதிப்பெண்களைப் அகில இலங்கை அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்றுபரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யாழ். இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன்அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம் பெற்றுள்ளார்.
அம்பலாங்கொடை ஸ்ரீ தேவானந்தா கல்லூரியின் சந்துனி அமயா சிங்கள மொழிமூலம் முதலிடம் பெற்றுள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல்மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 51,969 ஆகும், இது17.11% சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 1.06% அதிகம் என்று பரீட்சைகள் ஆணையாளர்நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.