யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மற்றும் எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் இன்றையதினம் b(செப். 01) ஐனாதிபதியால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வரவு – செலவுத் திட்டத்தில் யாழ்ப்பாணம் பொது நூலக மேம்பாட்டுக்காக விசேடமாக 100 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டது.

இதனூடான வேலைத்திட்டங்களை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் யாழ். மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா ஆகியோரால் வரவேற்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன் வரவேற்புரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ. சந்திரசேகர் உரையாற்றினார்.

அதன் பின்னர் யாழ்ப்பாணம் பொதுநூலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், எண்ணிமப்படுத்தல் செயற்றிட்டமும் தொடக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் உலகில் எங்கும் வசிப்பவருக்கு யாழ். பொது நூலகத்தின் புத்தகங்களை இணையத்தளத்தில் ஊடாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கும்.
இந்த நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீபவானந்தராஜா, க. இளங்குமரன், ஜெ. றஜீவன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாநகரசபை உறுப்பினர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், யாழ். நூலக வாசகர் வட்டத்தினர் ஆகியோர்கலந்துகொண்டனர்.