இந்தியாவின் 79ஆவது சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணம் மருதடி வீதியில்அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று(ஓகஸ்ட் 15) காலையில்சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய தேசியக் கொடியை இந்திய யாழ் துணைத் தூதர் சாய் முரளிஏற்றிவைத்தார்.
அதனை தொடர்ந்து, சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத்தலைவரின் வாழ்த்துச் செய்தியை துணைத் தூதுவர் வாசித்தார்.
இந்த நிகழ்வில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள், உத்தியோகஸ்தர்கள் , அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.