வளமான நாடு அழகிய வாழ்வு எனும் கருப்பொருளுக்கமைய, காணியற்றோருக்கான இலவச காணிப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (ஓகஸ்ட் 13) பளை மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் காணியில் வசித்து வரும் யாழ்ப்பாணமாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த 32 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவைச் சேர்ந்த300 பேருக்கும் இன்று காணி உறுதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசனஅமைச்சர் கே. டீ. லால்காந், கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள்அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , வட மாகாண ஆளுநர் நாகலிங்கம்வேதநாயகன் , கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர் டாக்டர் சுசில் ரணசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கெளரவகருணநாதன் இளங்குமரன் ஆகியோரின் விசேட விருந்தினர்களின்பங்குபற்றுதலுடன் இலவச காணி பத்திரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சிமாவட்ட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில் யாழ் மற்றும் கிழிநொச்ச மாவட்ட அரசாங்க அதிபர்கள் , அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டார்கள்.