நயினாதீவைச் சேர்ந்தவர் யாழ்- வீதி விபத்தில் உயிரிழப்பு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை போக்குவரத்து சபையின் யாழ். சாலை நடத்துனராக பணியாற்றும் நயினாதீவை சேர்ந்தவரும் கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட கி.பாலேஸ்வரன் என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

பலாலி வீதி, திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில்உணவருந்திய பின்னர் பிள்ளைகளுக்கும் உணவு வாங்கிக்கொண்டு பலாலிவீதியில் துவிச்சக்கர வண்டியில் ஏற முற்பட்டவேளை , வீதியில் மிக வேகமாகவந்த ஹயஸ் ரக வாகனம் மோதியுள்ளது.

அதில் படுகாயமடைந்தவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனாவைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றிஉயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளைமுன்னெடுத்துள்ளனர்.

Share this Article