கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் திருநாவுக்கரசர் சிலை மீண்டும் உடைக்கப்பட்டது

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி வளாகத்தில் அமைந்திருந்த திருநாவுக்கரசர் சிலை, இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 06) காலை, பாடசாலையில் நாயனார் குருபூஜை நிகழ்வு நடைபெற்று முடிந்த பின்னர், அதே இரவு சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பாடசாலை சமூகத்தினரால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாகவும் சில மாதங்களுக்கு முன்னர் இதே சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. பின்னர், பாடசாலை நிர்வாகம் அதனை புனரமைத்து பராமரித்துவந்த நிலையில், தற்போது மீண்டும் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article