கொக்குவில் சந்தை கடல் உணவுப் பொருட்கள் வெட்டும் கட்டணங்கள் குறித்த அறிவித்தல் – நல்லூர் பிரதேச சபை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நல்லூர் பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட கொக்குவில் பொதுச் சந்தையில் கடல் உணவுப் பொருட்களை வெட்டும் மற்றும் இறால் சுத்தம் செய்யும் சேவைகள் தொடர்பாக புதிய கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என அந்த பிரதேச சபைத் தவிசாளர் அறிவித்துள்ளார்.

அதன்படி, சந்தையில் பின்வரும் கட்டணங்கள் அமுல்படுத்தப்படுகின்றன:

  • 1 கிலோ மீன் வெட்டும் கட்டணம் – ரூ. 50

  • 1 கிலோ நண்டு வெட்டும் கட்டணம் – ரூ. 50

  • 1 கிலோ கணவாய் வெட்டும் கட்டணம் – ரூ. 100

  • 1 கிலோ சுறா மீன் வெட்டும் கட்டணம் – ரூ. 100

  • 1 கிலோ திருக்கை வெட்டும் கட்டணம் – ரூ. 50

  • 1 கிலோ பெரிய இறால் சுத்தம் செய்யும் கட்டணம் – ரூ. 100

  • 1 கிலோ சிறிய இறால் சுத்தம் செய்யும் கட்டணம் – ரூ. 120

இவைகளைவிட மேலதிகமாகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும், இது மீறப்பட்டால் பொதுமக்கள் 021-2222700 அல்லது 021-2212178 என்ற தொலைபேசி இலக்கங்களில் புகார் தெரிவிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டமை உறுதி செய்யப்படும் நிலையில், சம்பந்தப்பட்டோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

Share this Article