உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும்- டக்ளஸ்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூர் அதிகார சபைகளினால் தீர்க்கக் கூடிய, மக்களின் பிரச்சினைகளைஅடையாளம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்றுஆலோசனை வழங்கியுள்ளார் டக்ளஸ் தேவானந்தா.

கட்சியை மீளக்கட்டமைக்கும் பணிகள் முழுமூச்சுடன் முன்னெடுக்கப்பவதுதொடர்டபாக கடந்த ஜூலை06 ஆம் திகதி ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடனானசந்திப்பில்  மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில்,

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்  தமது செயற்பாடுகள் தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டதுடன் , வட்டாரக் குழுக்களை வலுப்படுத்தல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமும்கட்சியின் அரசியல் நிலைப்பாடுகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கட்சி செயற்பாட்டாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் செயற்றிறனை வலுப்படுத்தும் நோக்கில்செயலமர்வுகளை விரைவில் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article