சித்துப்பாத்தியின் புதிய பகுதியில் மண்டையோடு அடையாளம்.!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி – சித்துப்பாத்திஇந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச்சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் இருந்து இன்று (ஜூலை 05) மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் எனச் செய்மதிப்படங்கள் மூலம் சில பகுதிகள் சந்தேகத்தின் அடிப்படையில்அடையாளப்படுத்தப்பட்டு தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால்நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்து.

அந்தப் பகுதிகளில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவர்கள் மற்றும் நல்லூர் பிரதேசசபையின் பணியாளர்களின் உதவியோடு அகழ்வுப் பணிகள் கடந்த 2 ஆம் திகதிஆரம்பமாகின.

இந்நிலையில் நேற்றைய அகழ்வின்போது அந்தப் பகுதியில் சிறுமியின் ஆடைஒன்று முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய அகழ்வில்புதிய பகுதியில் மண்டையோடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

Share this Article