செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை சமூகவலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பரப்புவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும் என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
அகழ்வாராய்ச்சி பணிகள் தொடர்பாக நேற்று (ஜூன் 30) ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி சித்திபாத்தி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் வேலைகள் முன்னெடுக்கப்பட்டது.
இதுவரையான அகழ்வில் 33 மனித எலும்புத் தொகுதிகள் ஏற்கனவேஅடையாளம் காணப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட எலும்பு தொகுதிகள்தொடர்பாக நிபுணர்கள் வேலை செய்ய வேண்டிய தேவைப்பாடு இருப்பதால்நேற்று பகல் பொழுதில் மட்டும் இரண்டு சிறுவர்களின் உடல்கள் அகழ்ந்துஎடுக்கப்பட்டு ஆய்வுக்காக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மட்டத்தில் உள்ள எலும்புத் தொகுதிகள் ஒன்றோடு ஒன்றுபின்னிப்பிணைந்து குழப்பமான சூழலில் இருப்பதால் சரியான விதத்தில்ஆய்வொன்றைச் செய்து தெளிவான விதத்தில் சரியாக அகழ்ந்த எடுப்பதற்குநேரம் எடுக்கும் என்பதால் நேற்று புதிதாக எதுவுமேஅடையாளப்படுத்தப்படவில்லை.
சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழிதொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவ்வாறான படங்கள் பகிரப்படுமாக இருந்தால்குற்றவியல் விசாரணைகளை இடையூறு செய்தார் என்ற அடிப்படையிலும்நிலுவையில் உள்ள வழக்கில் நீதிமன்றை அவமதித்தார் என்ற அடிப்படையிலும்சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.