செம்மணி புதைகுழியில் பொம்மையுடன் மீட்கப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புகூட்டு தொகுதி மீட்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழி ஒன்றினுள் இருந்து சிறுவர்கள் விளையாடும் சிறுபொம்மை ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் இன்றைய தினம்(ஜூலை 01) செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத்தக பையை ஒத்த நீல நிற பையுடன்காணப்பட்ட சிறு பிள்ளையின் எலும்புக்கூட்டு தொகுதி என நம்பப்படும் எலும்புகூட்டு தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதனுள்காணப்பட்ட நீல நிற பையையும் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது
பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மைஒன்றும் சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது
அதேவேளை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்ட மேலதிகபணிகளின் போது மேலும் மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன. அவை ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து காணப்படுவதால், அவை எத்தனை என சரியான எண்ணிக்கை கூற முடியாது எனதெரிவிக்கப்பட்டது.
அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் கடந்த ஞாயிற்றுக்கிழமைவரையில் 33 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்இன்றைய தினமும் மேலும் சில எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்காணப்பட்டுள்ளன.