எச்சரிக்கைகளுடன் விடுவிக்கப்பட்ட வசாவிளான் – பலாலி வீதி !

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இராணுவப் பாதுகாப்பு வலந்த்திற்குள் இருந்த வசாவிளான் – பலாலி வீதிதிறக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த குறித்தவீதியினூடாக போக்குவரத்து நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஏறக்குறைய 34 வருடங்களாக மூடப்பட்டிருந்த குறித்த வசாவிளான் தொடக்கம்பலாலி கடற்கரை சந்தி வரையிலான பாதை நீண்ட போராட்டங்களுக்குப் பிறகுஇன்று திறக்கப்பட்டுள்ளதுடன் இவ்வீதியை பயன்படுத்துவது தொடர்பாக சிலகட்டுப்பாட்டு விதிமுறைகள் இராணுவத்தினரால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சில பாதுகாப்புக் காரணங்களுக்காக குறித்த வீதியினூடாக நடந்தும், மிதிவண்டியினூடாகவும் பயணிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில்வாகனங்களினூடான போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதுவும் போக்குவரத்து காலை 06:00 மணிமுதல் மாலை 05:00 மணிவரைமாத்திரமே மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்படும்.

குறித்த வீதியினால் பயணிப்பவர்கள் வீதியின் இடையில் நிறுத்துதல், வாகனங்களைத் திருப்புதல், பயண நேரத்தில் புகைப்படம், காணொளி எடுத்தல், ஆகிய நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,

நடைபயணம் மற்றும் பேருந்து தவிர்ந்த பாரவூர்திகள் குறித்த வீதியூடாகசெல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மணித்தியாலத்துக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் மாத்திரமே செல்லமுடியும் என்பதுடன் சாரதிகளுக்கான அடையாள ஆவணங்கள்கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமை ஆகிய விதிமுறைகள் வழங்கப்பட்டுள்ளஅதேவேளை இவ்விதிமுறைகளை மீறுதல் சட்டவிரோதம் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக மூடப்பட்டு இருந்த குறித்த வீதியூடான போக்குவரத்துக்குஅனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த அதேவேளை, கடந்த ஜனவரி 31ம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில்யாழ் மாட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இக்கோரிக்கை ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி 2009ம் ஆண்டு முப்படையினர் வசம் இருந்த 23,850.72 ஏக்கர்காணியில் 21,226.43 என்ன காணி விடுவிக்கப்பட்டு தற்போது படையினர் வசம்2624.29 ஏக்கர் தனியார் காணிகளும் 951.52 ஏக்கர் அரசகாணிகளும்உள்ளதாகவும் அக்காணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு விடுவிக்கப்பட வேண்டும்எனவும் பலாலி வீதி முழுமையாக மக்கள் பாவனைக்கு வழங்கப்பட வேண்டும்எனும் கோரிக்கை அரசாங்க அதிபரால் முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த வீதி விடுவிப்பினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும்,  இது ஒருதேர்தலுக்கான நடவடிக்கையாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள்பாவனைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

Share this Article