விந்தன் கனகரட்ணம், மகனுடன் தமிழ் அரசுக் கட்சியில் இணைவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் வலிகாமம் தெற்கு பிரதேசசபை, யாழ் மாநகரசபை, வடக்குமாகாணசபை உறுப்பினருமாக இருந்த விந்தன் கனகரட்ணம் நேற்றையதினம் (மார்ச் 10)  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில் ஆயுள் கால உறுப்பினராகஇணைத்து கொண்டுள்ளார்.

இதேவேளை அவரின் மகனான யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடமாணவன் V.K.மார்க் அன்ரனியும் இதன்போது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியில்ஆயுள் கால உறுப்பினராகவும் அக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராகவும்  இணைந்து கொண்டுள்ளார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவர் சீ.வி.கே.சிவஞானம்அவர்களின் முன்னிலையில் அவரின் அலுவலகத்தில் வைத்து  இருவருக்குமானஉறுப்புரிமைகளை  வழங்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share this Article