உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 9 கட்சிகள் இணைந்து சங்கு சின்னத்தில் போட்டி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் 9 கட்சிகள் இணைந்து போட்டியிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. 

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள்மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான கலந்துரையாடலின் போதே இந்தஇணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. 

இதன்படி, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐந்துகட்சிகளுடன் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய பசுமை இயக்கம், ஜனநாயகதமிழரசுக் கூட்டணி, சமத்துவ கட்சி ஆகியன இணைந்துள்ளன. 

இந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் குறித்த கட்சிகள்ஒன்றிணைந்து ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி எனும் பெயரில் சங்குசின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமானசுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Share this Article