ஆவரங்கால் விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி பலி!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் நேற்றைய தினம் (ஜனவரி22) இடம்பெற்றமோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில்மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தில் அச்சுவேலி தெற்கை சேர்ந்த உதயகுமார் விதுஷன்(வயது 32), எனும்இளைஞனே உயிரிழந்துள்ளார். கரவெட்டியைச் சேர்ந்த தேவமனோகரன்பிரணவன் (வயது 23) எனும் இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் , யாழில் இருந்து பருத்தித்துறை நோக்கிமோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞன் , வீதியில் மாடுகளை மேயத்துச் சென்ற இளைஞனுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார்.விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த இளைஞனும் , மாடுகளை சாய்த்து சென்ற இளைஞனும்படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் மாடுகளை சாய்த்து சென்ற இளைஞன் வைத்தியசாலையில்சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஓட்டியான இளைஞன் தொடர்ந்தும் அவசர சிகிச்சைபிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலும் சம்பவம் தொடர்பில் அச்சுவேலிபொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share this Article