சீரற்ற காலநிலை காரணமாக யாழ் கல்வி வலயத்தில் இரு பாடசாலைகள் மூடல்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழ்ப்பாணத்தில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம்கல்வி வலயத்தில் அமைந்துள்ள இஸ்லாமிய பாடசாலைகள் இரண்டினை தற்காலிகமாக மூடுவதற்கு அரச அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்தவகையில் யாழ் ஒஸ்மானியா கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கதீஜா மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின்பாதுகாப்பு கருதி நாளையும் (27.11.2024) நாளை மறுதினமும் (28.11.2024) தற்காலிகமாக மூடுமாறு அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் வலயக் கல்விப்பணிப்பாளரைக் கேட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Share this Article