பாராளுமன்றத் தேர்தல் – 2024 யாழ்ப்பாணம் மவட்டத்தில் சுமுகமாக நிறைவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான பாராளுமன்ற தேர்தல் வாக்கொண்ணல் நடவடிக்கைகள் யாவும் சுமுகமாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 06 பாராளுமன்ற ஆசனங்களுக்கான விருப்புவாக்குகளைப் பெற்றவர்கள் விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றையதினம் மு.ப 12.15 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமானயாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கட்சி மற்றும்சுயேச்சைக் குழு பெற்ற விருப்பு வாக்குகள் விபரங்களை உத்தியோகபூர்வமாகஅறிவித்தார்.

மேலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலானது சுமுகமாகநடைபெற்றதாகவும் அதற்காக ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும்தெரிவத்தாட்சி அலுவலர் தமது நன்றியினைத் தெரிவித்த்துள்ளதாக யாழ் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Share this Article