வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலைய பகுதி யாழ்- மத்தியகல்லூரியில் கள ஆய்வு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாளை மறுதினம்(நவம்பர் 14) நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும்நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும்பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்கஅதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களின்தலைமையில் இன்றைய தினம் (நவம்பர் 12)   கள ஆய்வு இடம்பெற்றது.

இக் கள ஆய்வில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி உள்புற பாதுகாப்பு ஏற்பாடுகள்தொடர்பாகவும், வெளிப்புற சூழலில் வாகனப் போக்குவரத்தினை மட்டுப்படுத்தல்தொடர்பாகவும்,  யாழ் வேம்படி உயர்தரப் பாடசாலையில்   தேர்தல் பணியாளர்கள்மற்றும் முகவர்களின்  வாகனப் பாதுகாப்பு தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

இக் கள ஆய்வில் உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ்,  வடமாகாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜே.ஹாலிங்க ஜெயசிங்க,  யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லு. சூரிய பண்டார, யாழ்ப்பாணஉதவி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உதவிதெரிவத்தாட்சி அலுவலர்கள்  கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article