தட்டம்மை எதிர்ப்பு தடுப்பூசி வாரம் நாளை முதல் தொடங்குகிறது.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

சுகாதார அமைச்சு, தட்டம்மை தடுப்பூசி வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை நாளை திங்கட்கிழமை (நவம்பர் 4) முதல் நவம்பர் 9 வரை முன்னெடுக்கவுள்ளது.

தட்டம்மை, ருபெல்லா தடுப்பூசி வாரத்தை முன்னிட்டு, குறிப்பிட்ட பிரிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும்.

தட்டம்மை மற்றும் ருபெல்லா போன்ற தொற்றுநோய்கள் தொடர்பான தகவல்களை 0704 565 656 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வேலைத்திட்டம், நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Share this Article