வடக்கு, கிழக்கில் தீவிரமடையும் மழை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழைதீவிரமடையும் என்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் புவியியல்துறையின்தலைவரும் வானிலையாளருமான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் எதிர்வரும் 5ஆம்திகதி வரை இடையிடையே சிறிய மழை கிடைக்கும்.

எதிர்வரும் 6ஆம் திகதி முதல் மழை தீவிரமடையும். எதிர்வரும் 9ஆம் திகதி முதல்23ஆம் திகதி அதிகாலை மற்றும் காலை வேளைகளில் குளிரான வானிலைநிலவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை வேளைகளில் (3) இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடிய வகையில் வளிமண்டல நிலைமைகள்காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழைஅல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேல் மற்றும் தென் மாகாணங்களின்கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடியசாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் குறித்த திணைக்களம் வௌியிட்டுள்ளஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும்அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால்ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு பொதுமக்கள் தேவையானநடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம்கேட்டுக்கொண்டுள்ளது.

Share this Article