இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபன எரிபொருட்கள் விலைகளில் திருத்தம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலியகூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலைதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 377 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.

அத்துடன் 319 ரூபாயாக காணப்பட்ட லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன்லீற்றர் ஒன்றின் விலையும் 06 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதியவிலை 313 ரூபாவாகும்.

ஏனைய எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை எனஇலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Share this Article