உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலருக்கு திடீர் கரிசனை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிலருக்கு இப்போதுதான் திடீர்கரிசனை ஏற்பட்டுள்ளதாக, பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் தொடர்பில் தற்பொழுது திடீரென கரிசனை ஏற்பட்டு, பேசும்அரசியல்வாதிகளில் எவ்வித பயனுமில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஒரு வார்த்தைகூடபேசாத அரசியல் தலைவர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்தற்பொழுது இத்தாக்குதல் குறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாக அவர்தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடைபெறவுள்ளதால், தங்களை வீரர்களாக காண்பித்துக்கொள்ளமுயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இவ்வாறான நபர்களினால் எவ்வித பயனும் கிடையாது எனவும் அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் பொல்ஹேன பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் நடைபெற்றஆராதணையொன்றில் பங்கேற்ற போதே, பேராயர் இந்த விடயங்களைத்தெரிவித்துள்ளார்.

Share this Article