பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் விற்பனை – இருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்துப் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த இருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சுன்னாகம் மற்றும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து பெருந்தொகையான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாடசாலைகளைச் சூழவுள்ள பகுதிகளில் பொலிஸார் தீவிர சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article