மரண அறிவித்தல்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

சிறிகணேசராசா நிசாந்தன்

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும்,கோணாந்தோட்டம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிறிகணேசராசா நிசாந்தன் நேற்று (18.11.2023) சனிக்கிழமை அகால மரணமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சிறிகணேசராசா மற்றும் கம்சவதனி (வதனி-ஆசிரியை, நாவாந்துறை றோ.க.வித்தியாலயம்) தம்பதிகளின் சிரேஷ்ட மகனும், நிதர்சினி (இத்தாலி), நிதர்சன் (பிரான்ஸ்), சஞ்சிகா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும், சசிந்திரகுமார் (இத்தாலி), காந்திகா (பிரான்ஸ்), சுரேஸ்கரன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனிசா, அக்ஷரன், நிக்கிஷன் ஆகியோரின் மாமனாரும், அபிஷா, தருண் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் நாளை (20.11.2023) திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்திற்கு எடுத்தச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்
076 937 4795
இல. 41/9, மானிப்பாய் வீதி,
கோணாந்தோட்டம்,
யாழ்ப்பாணம்.

Share this Article