நடுவானில் விமானியை தாக்கிய பயணி!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

அவுஸ்திரேலியா – சிட்னி நகரில் இருந்து டெல்லிக்கு கடந்த 9 ஆம் திகதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.

அப்போது இருக்கையை மாற்றிக் கொள்வது தொடர்பாக பயணி ஒருவர் விமான ஊழியர்கள் 5 பேரிடம் தகராறு செய்தார்.

அப்போது அங்கு இருந்த ஏர் இந்தியா நிறுவன அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதில் அதிகாரியை அந்த பயணி திடிரென்று கன்னத்தில் அறைந்தார். தலையை பிடித்து தள்ளினார்.
இதையடுத்து அந்த பயணியை சக ஊழியர்கள் கட்டுப்படுத்தினர்.

விமானம் டெல்லியில் தரையிறங்கிய பிறகு, அதிகாரியை தாக்கிய பயணி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் பற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சிட்னியில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர் எச்சரிக்கையை மீறி நடந்து கொண்டார்.

ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் நடந்து கொண்டார். இது எங்கள் ஊழியர் உள்பட பயணிகளுக்கு துன்பத்தை ஏற்படுத்தியது.

விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் பயணி, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பின்னர் அவர் எழுத்துப் பூர்வமாக மன்னிப்பு கேட்டார்.

இந்த சம்பவம் குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கழகத்திடம் முறையாக தெரிவிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

Share this Article