மரண அறிவித்தல் : சின்னையா தில்லையம்பலம்

Anarkali
Anarkali  - Senior Editor
2 Min Read

சின்னையா தில்லையம்பலம்

(ஓய்வுபெற்ற காணி மேற்பார்வையாளர், முன்னாள்  தலைவர் – நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், முன்னாள் தலைவர் – நெடுந்தீவு கரமத்தை கந்தசுவாமி ஆலயம், முன்னாள் உபதலைவர் –  ஓய்வூதியர் நம்பிக்கை நிதியம்)

நெடுந்தீவு கிழக்கை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா தில்லையம்பலம் இன்று வெள்ளிக்கிழமை (30 ஜூன் 2023) இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னையா நாகமுத்து தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வள்ளியம்மையின் (ஓய்வுநிலை உபதபால் அதிபர்) அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அன்னப்பிள்ளையின் அன்பு சகோதரனும்,

சாரதாதேவி (முன்னாள் அதிபர் நெடுந்தீவு மகா வித்தியாலயம், முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் – நெடுந்தீவு), கங்காதரன் (லண்டன்), தயாநிதி (ஆசிரியர், கொக்குவில் ஸ்தான சி.சி.த.க பாடசாலை), கிரிதரன் (முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் – மாவட்ட தொழில் அலுவலகம் – யாழ்ப்பாணம்)  ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருஷ்ணதாஸ் (ஓய்வு பெற்ற பதிவாளர்), உதயராணி (லண்டன்), தர்மரத்தினம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), யோகலட்சுமி ( சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் – நல்லூர் பிரதேச செயலகம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரமணன் – துஷ்யந்தினி, ரதீபன், காயத்திரி – பிரகாஷ், சர்மிலன் – மஞ்சுஹா , பரந்தகன், கிறிஸ்ணி – ஜனேஸ், கிறிஷாந், கிறிஸ்துகா, கிறிஸ்துயா, தர்ஷிகா- சக்திவேல்நாதன், சுஜீவன், பிரணவி, பைரவி ஆகியோரின் பாசமிகு பேரனும்,

நெனிஹா, பவானிகா, சேயோன், திவ்யியன், ஆத்மிகா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (03 ஜூலை 2023) காலை 9.30 மணியளவில் சிவப்பிரகாசம் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக கோம்பயன்மணல் இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும் தகனம் செய்யப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்: குடும்பத்தினர்.
39/12 வைரவர் கோவில் ஒழுங்கை,
சிவப்பிரகாசம் வீதி,
யாழ்ப்பாணம்.
0774641123

 

Share this Article