மரண அறிவித்தல் (திருமதி கார்த்திகேசு நாகசுந்தரி)

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட திருமதி கார்த்திகேசு நாகசுந்தரி அவர்கள் கடந்த (22.04.2023) சனிக்கிழமை காலமானார்.

அன்னார் காலம்சென்ற இராமலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் காலம்சென்ற கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும், காலம்சென்ற கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற நாகம்மா பூரணம் மற்றும் காலம்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா நாகரத்தினம் கண்மணிப்பிள்ளை சிந்தாமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும், லோகேந்திரன் (கனடா) மற்றும் காலம்சென்ற யோகேந்திரன் ஆகியோரின் அன்புத்தாயும், யோகேஸ்வரியின் (கனடா) அன்பு மாமியாரும், கார்த்திகன் கபிலன் ஆகியோரின் அன்புப் பேத்தியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் இலக்கம் 116/2. இராசாவின் தோட்ட வீதி, யாழ்ப்பாணம் என்ற முகவரியில் நாளை (27.04.2023) வியாழக்கிழமை காலை 8.00 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டு முற்பகல் 10.00 மணிக்கு தகனக் கிரியைக்காக கோம்பையன்மணல் மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.
0776510943, 0774269166

Share this Article