அனலைதீவில் 11 மாத குழந்தை பரிதாப மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
Newborn's Feet Cradled in Parent's Hand

அனலைதீவில் 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இந்த சோக சம்பவம் இன்று (ஜூலை 20) காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

வீட்டினுள் இருந்து நீர் இறைக்கும் இயந்திரத்திற்கு மின்சார வயர் இருந்து இணைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தவழ்ந்து சென்ற குழந்தை வயரினை இழுத்தபோது மின்சாரம் குழந்தையினை தாக்கியுள்ளது.

உடனடியாக அனலைதீவு பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்து சென்று காட்டிய போதும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையினை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article