நில அதிர்வால் உருக்குலைந்தது துருக்கி! – ஆயிரக் கணக்கில் உயிரிழப்புக்கள்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

தென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி வருகின்றனர்.

நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் துருக்கியிலும் சிரியாவின் எல்லையிலும் குறைந்தது 4 ஆயிரத்து 361 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சுமார் பத்தாயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, உக்ரைன், ரஷ்யா, இந்தியா உட்பட உலக நாடுகள் பலவற்றின உதவிக் குழுக்கள் துருக்கி நோக்கி விரைந்துள்ளன.

அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share this Article