நேபாள விமான விபத்தில் சிக்கிய பயணியின் லைவ் வீடியோ! – உறைய வைக்கும் இறுதி நிமிடங்கள்

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

நேபாள நாட்டில் 72 பயணிகளுடன் சென்ற பயணிகள் விமானம் போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற போது விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துக்கு சில நொடிகள் முன்னர் விமானத்தில் பயணித்த பயணி எடுத்த லைவ் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி உள்ளது.

யெட்டி விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் ஒன்று 68 பயணிகள், 4 விமானப் பணியாளர்கள் என 72 பேருடன் நேபாளத்தில் உள்ள போக்கரா விமான நிலையத்தில் தரையிறங்கச் சென்றது. அப்போது, விமானம் திடீரென தரையில் விழுந்து தீப்பற்றி எரிந்தது.

விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் தரையிறங்கும் காட்சியை லைவ் வீடியோவாக பதிவு செய்துள்ளார். சில நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோவின் இறுதி சில நொடிகள் அதிர்ச்சிகரமாக உள்ளது.

இந்த விமானத்தில் 5 இந்தியர்கள், 4 ரஷ்யர்கள், 2 தென் கொரியர்கள் மற்றும் அவுஸ்திரேலியா, பிரான்ஸ், அர்ஜென்டினா, அயர்லாந்தை சேர்ந்த தலா ஒருவர் என 15 வெளிநாட்டு பயணிகள் பயணித்துள்ளனர் என்று யெட்டி விமான நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article