இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த அவுஸ்திரேலியா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read
Major architecture landmarks of the city of Sydney and Australia around Sydney harbour in elevated aerial view in warm smooth sunlight at the morning.

கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று உள்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் மாதத்தில் அவுஸ்திரேலியாவில் உள்ள(onshore) 50 இலங்கையர்கள் தமது Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட 8 இலங்கையர்களின் விண்ணப்பங்களும் கடந்த நவம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து 30ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை கடந்த நவம்பர் மாதம் மொத்தம் ஆயிரத்து 643 புகலிடக் கோரிக்கை விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று அவுஸ்திரேலிய உள்துறை அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article