நல்லூர் பிரதேச செயலக ஓய்வூதியர் தின விழாவில் நெடுந்தீவு நாகம்மா ரீச்சர்என்று அழைக்கப்படும் திருமதி மீனாட்சி பூரணசிங்கம் (வயது 90) அவர்களது நடன ஆற்றுகை சிறப்பாக இடம்பெற்று தற்போது வலைத்தளங்களின் அவரது ஆற்றுகை கணொளி பரவலாக பகிரப்பட்டு பாராட்டுகளைப் பெற்றுவருகின்றது.
இவர் நெடுந்தீவை கிழக்கினைப் பிறப்பிடமாகவும் தற்போது கொக்குவில் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட 90 வயது ஓய்வுநிலை நடன ஆசிரியை என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவில் அவர் கல்விகற்ற காலத்தில் நடனபாடம் அறிமுகம் செய்யப்பட்டபோது கலைச்செல்வன் ஏரம்பு சுப்பையா ஆசிரியரின் மாணவியாக பயின்று பின்னர் கவின்கலை கல்லூரியில் பயின்று நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை எலிசபெத் மகாராணி இலங்கைக்கு வருகை தந்த போது இவரதுதனி நடனம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளமை எமது தீவுக்கு சிறப்பாகும்.