9 வது புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க பதவிப்பிரமாணம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகஅனுரகுமார திஸாநாயக்க சற்றுமுன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

இன்று (செப். 23) காலை ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்தஜயசூரிய முன்னிலையில், அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாகபதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஈ.எம்.எஸ்.பி ஏக்கநாயக்க மற்றும்பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

நேற்று முன்தினம் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில்தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5,740,179 வாக்குகளைப் பெற்று சஜித் பிரேமதாசவை தோற்கடித்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Share this Article