கோவிட் கட்டுப்பாட்டு வாரம் காரைநகாில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது இவ்வாரத்தின் முதல் நாளான நேற்று (மே 03) பல்வேறு செயற்பாடுகளுடன் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் உட்பட நாடாளாவிய ரீதியில் கோவிட் ஆனது தீவிரமாகப் பரவி வருகின்றது. கோவிட் பரவலைக் குறைக்கும் முகமாக காரைநகரில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் நேற்றிலிருந்து ஒரு கிழமைக்கு கோவிட் கட்டுப்பாட்டு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
முதல் நாளான நேற்று காரைநகர் பிரதேச செயலகம் பாதுகாப்புத் தரப்பின் ஒத்துழைப்புடன் காரைநகரில் பேரூந்துகள், வீதிப்போக்குவரத்து கண்காணிக்கப்பட்டது.
முகக்கவசம் அணியாதவர்கள், நாடிக்குக் கீழ் முகக்கவசம் அணிந்தவர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
காரைநகர் கசூரினா பீச்சில் நேற்று வெளி இடங்களில் இருந்து நூறுக்கும் அதிகமானவர்கள் ஒன்று கூடியதனால் தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும் பலமுறை அறிவுறுத்தியும் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்காமல் பல மதுப்பிரியர்கள் ஒன்று கூடி இருந்ததனால் கள்ளுத் தவறணை ஒன்றும் மூடப்பட்டது.
கோவிட் கட்டுப்பாட்டு தொடர்பில் காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையாது பிரதேச செயலகம் மற்றும் காவற்துறையினருடன் பங்களிப்புடன் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனா்.