Tuesday, December 6, 2022

745 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்

Must Read

குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார் மற்றும் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளில் சிக்கியிருந்த 745 இலங்கையர்கள் நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று காலை கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களில் வந்திறங்கியுள்ளனர்.

கட்டாரில் சிக்கியிருந்த 20 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளனர்.

இந்தியாவில் தங்கியிருந்த ​​290 இலங்கையர்கள், குவைத்திலிருந்து 266 பேர் இன்றும் மத்தள விமான நிலையத்திற்கு இலங்கைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் வருகை தந்துள்ளனர்.

மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சிக்கித் தவித்த 169 பேர் துபாயிலிருந்து மத்தள விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் எவரும் பதிவாகவில்லை, அதன்படி நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் மொத்த எண்ணிக்கை 2902 ஆக காணப்படுகிறது.

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Latest News

நயினாதீவில் நடைபெற்ற ரத்த தான முகாம்

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அண்மையில் ஏற்பட்ட குருதித் தட்டுப்பாட்டைக் கருத்திற்கொண்டு. புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வசிக்கும் நயினாதீவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை ஜெகநாதன்...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img