பளைப் பகுதியில் 55 மோட்டாா் குண்டுகள் மீட்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

பளை பகுதியில் நிலத்தில் புதைந்து கிடந்த நிலையில் 55 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பளை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றிலேயே குறித்த மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் குறித்த இடத்தில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் 55 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட குண்டுகளை செயலிழப்பு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பளை பொலிசார் தெரிவித்துள்ளனர்

Share this Article