63 கணனி சாதனங்களில் மறைத்து வைத்து கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் சிக்கியது !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

5 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளை 63 கணனி சாதனங்களில் மறைத்து வைத்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க கொள்கலன் முனையகம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

துபாய் நிபுன என்ற கடத்தல்காரரே இந்த போதைப்பொருளை இலங்கைக்கு அனுப்பியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Share this Article