6 மாத குழந்தை வெட்டிக்
கொலை செய்த தந்தை
குடும்பத்தகராறு காரணமாக தனது பச்சிளம் குழந்தையை வாளால் வெட்டி கொலைசெய்த கொடூரம் திருகோணமலை கப்பல் துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரிவித்ததாவது,
சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கப்பல்துறை பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக நபர் ஒருவர் தனது மாமா, மாமி மற்றும் 6 மாத குழந்தையை வாளால் வெட்டியுள்ளார்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 2.30 அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் வெட்டிய சந்தேக நபரின் மாமா, மாமி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட இருந்த நிலையில் மாமியாரின் கை துண்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் 6 மாத குழந்தை வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை குழந்தை உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீஸார் தேடி வருகின்றனர்.