அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது வென்னப்புவ–லுனுவிலப் பகுதியில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி, குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (டிசம்பர் 04) இறுதி அஞ்சலி செலுத்தினார்.
ரத்மலானையில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இல்லத்திற்கு முற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியதுடன், விமானியின் மனைவி, பெற்றோர், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா ஆகியோர் கூட இவ்வஞ்சலி நிகழ்வில் பங்கேற்றனர்.
