4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டத்தில் ஆண், பெண் இரு பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் தங்கம் வெற்றி

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இந்தியாவில் நடைபெற்று வரும் 4ஆம் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், நேற்று (ஒக். 25) மாலை நடைபெற்ற 4×100 மீட்டர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இலங்கை வீரர்கள் தங்கப் பதக்கங்களை கைப்பற்றியுள்ளனர்.

ஆண்கள் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 39.99 வினாடிகளில் தூரத்தை நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றது. இந்திய அணி 40.65 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தை பெற்றது, பங்களாதேஷ் அணி 40.94 வினாடிகளுடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

பெண்கள் பிரிவில் இலங்கை வீராங்கனைகள் 44.70 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கத்தை வென்றனர். இந்தியா 44.93 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தை பெற்றது, மாலைத்தீவு அணி 47.79 வினாடிகளில் தூரத்தை முடித்து வெண்கலப் பதக்கத்தை பெற்றது.

Share this Article