ஆடம்பர பயண இதழான Condé Nast Traveler வெளியிட்ட புதிய அறிக்கையின் படி, 2025 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் குடும்ப நட்பு நாடாக இலங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. குடும்பங்கள் இடம்பெயர சிறந்த இடமாக இலங்கை முதன்மை இடத்தைப் பெற்றுள்ளது.
அறிக்கையின் சிறப்பம்சங்கள்:
✅ கல்வி அமைப்பு – சிறந்த தரமான கல்வி முறைக்கு உயர் மதிப்பீடு
✅ குறைந்த குழந்தை பராமரிப்பு செலவு – ஆண்டுக்கு வெறும் 354.60 அமெரிக்க டொலர் செலவாகும்
✅ சிறப்பான சுற்றுலா வாய்ப்புகள் – தேசிய பூங்காக்கள், கடற்கரைகள், வரலாற்றுச் சின்னங்கள்
✅ சுவையான உணவுகள் மற்றும் கலாச்சாரம் – இலங்கையின் பாரம்பரிய உணவு மற்றும் சந்தை பொருள்கள் சிறப்பு
Condé Nast Traveler இதழின் விளக்கத்தின் படி, இலங்கை தனது வனவிலங்குகள், பரந்த கடற்கரைகள், மற்றும் கண்கவர் வரலாற்று இடங்களின் மூலம் உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் திறன் கொண்டது.
2025 ஆம் ஆண்டில் மிகவும் குடும்ப நட்பு நாடுகள்:
1️⃣ இலங்கை 🇱🇰
2️⃣ சுவீடன் 🇸🇪
3️⃣ நோர்வே 🇳🇴
4️⃣ நியூஸிலாந்து 🇳🇿
5️⃣ ஐஸ்லாந்து 🇮🇸
6️⃣ ஜேர்மனி 🇩🇪
7️⃣ பின்லாந்து 🇫🇮
8️⃣ டென்மார்க் 🇩🇰
9️⃣ அவுஸ்திரேலியா 🇦🇺
🔟 அமெரிக்கா 🇺🇸
இந்த அங்கீகாரம் இலங்கையை உலகளாவிய குடும்ப சுற்றுலாவின் முக்கிய மையமாக நிலைநிறுத்துகிறது!