இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியைகள் நாளை ஞாயிற்றுக்கிழமை (பெப்ரவரி 02) காலை 8 மணிக்கு மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் இடம்பெறும். பின்னர், மதியம் 1 மணியளவில் மாவிட்டபுரம் தச்சன்காடு இந்து மயானத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் மறைவின் போது 82 வயதினைக் கொண்டிருந்தார்.