முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி கல்விளான் பகுதியில் வயல் வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால்வியாழக்கிழமை (ஜனவரி15) தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.
கல்விளான் பகுதியில் வயற்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவரின் மோட்டார் சைக்கிளே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.