47 ஆண்டுகளுக்குப் பின் நேற்று மீள ஆரம்பித்த திருச்சி – யாழ் விமான சேவை !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

47 வருடங்களுக்குப் பின்னர் யாழ்ப்பாணம் மற்றும் திருச்சிக்கு இடையிலானவிமான சேவை நேற்று (மார்ச்30) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ விமான சேவை நிறுவனத்தினால் இந்த சேவைஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சியிலிருந்து 27 பயணிகளுடன் நேற்று மதியம் 02.02 க்குவிமானமொன்று பலாலி விமானநிலையத்தை வந்தடைந்தது.

அதேநேரம், பலாலி விமான நிலையத்திலிருந்து மீண்டும் 36 பயணிகளுடன்குறித்த விமானம் மாலை 3 மணியளவில் திருச்சியை நோக்கிப் புறப்பட்டது.

இந்தநிலையில், எதிர்வரும் தினங்களில் குறித்த விமானமானதுதிருச்சியிலிருந்து பிற்பகல் 1.25 க்கு புறப்பட்டு பிற்பகல் 2.25 க்குயாழ்ப்பாணத்தை வந்தடையவுள்ளது.

பின்னர், யாழ்ப்பாணத்திலிருந்து பிற்பகல் 3.05 க்கு புறப்படும் விமானம், மாலை4.05 க்கு திருச்சியைச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article